Saturday, May 19, 2007

சாதனை

Kavithai pottikaaga ezhithinen.. No prize.. Irukave iruku Namma stage.. Arangetram pannidalaamnnu dhaan..

சாதனை

நிலவினைத் தொடுவதும், நனிபகலவனை அறிவதும்,
கடல்தனைக் களைவதும், கலைபலவினைக் கற்பதும்,
புகழ்தனைப் பெறுவதும், நல்லுறவினைத் துறப்பதும்,
நினைவினை விட்டொழியா உயர்சாதனையாம் சாதனையே!!

சிந்தனை செய்யின், எத்தனை சாதனை
வாழ்வினை ஒட்டியே, அன்றன்றும், அளவற்றும் !
சிலவினை சொல்கிறேன் சிந்தித்துப் பாருங்கள் !!
சாதனையே ! அவையாவும் சிறப்புமிகு சாதனையே !!!

மனதினைக் கல்லாக்கி மகனைக் கண்டித்து,
வயதினை வணங்கி, தந்தையை மதித்து,
தவறினைக் கடிவதும், தவறாமல் படிவதும்,
உறவினை வளர்க்கும் உன்னத சாதனையே!!

தன்சோதனைத் திவலையில் புன்னகை ஏந்தி,
பிறரிடரினை தமதேயென எண்ணித் தாங்கி,
இடியினைப் பொருத்தலும், இருளாமல் காத்தலும்,
பிரிவினை தவிர்க்கும் பெருஞ் சாதனையே!!

நல்வினை செய்கையில் நல்லபல மனங்கண்டு,
பிறர்மனை வாழ்வில் புகாமல் வெளிநின்று,
உளந்தனை தொடுதலும், உளவாது தொடாதலும்,
திருவினை அளிக்கும் திகைப்புச் சாதனையே!!

பண்பினைத் தாங்கும் பண்டிதனை மேல்நோக்கி,
நிந்தனை செய்யாது கீழவரின் குறைபோக்கி,
உயர்வினை நோக்குவதும், தாழ்வினைப் போக்குவதும்,
அறிவினை மேம்படுத்தும் அருமைமிகு சாதனையே!!

சோதனை வெள்ளத்தில் செய்சாதனை மறக்காது,
இத்துணை சாதனையாயென இருமாப்பில் மலைக்காது,
தன்னைத் தானே தனிமனிதன் பகுத்தறிவதே,
உயர்-வானை ஒத்த ஒப்பில்லா சாதனை !!


Thanks to Ace, Rc and Shantha for all the motivation and help!!

8 comments:

சிங்கம்லே ACE !! said...

freeya vidunga.. kavithai arumaya irukku...

Priya said...

yeh.. vittuten..thank u ace!!

Jeevan said...

Well writen priya!! Saathikka thundoom Kavithai:)

Priya said...

thank u jeevan!!

Muthukumar said...

Priya,
Romba nalla ezhudhi iruka. Loved it!

Priya said...

thank you pb!!!!!

Anonymous said...

Good one priya. Especially andha last paragraph arumai.

rc.

PS. En indha oora emaathara photo?

Priya said...

hello
unakku poraaamai !! adhaan !!

actually last para dhaan dhristi maari sumaaraa irukku :)-