Sunday, June 15, 2008

ஆண்டவன் சிரிப்பான்

வெளியே வேகாத வெய்யில் – பல்கலைக்கழகத்தின்
உள்ளே கடுமையான குளிர் !
பொருக்க முடியாமல் நான் – கொணர்ந்தேன்
அறைவெந்திப் பெட்டியெனும் சாதனம்! (room heater)

நான்:

“என்னடா இது! விந்தையான உலகம்”- இப்படித்தானே
ஆண்டவன் நினைப்பான்! சிரிப்பான்!!

வெட்கக்கேட்டில் நான்!!

மனம் சொல்லியது:

"பொறு பிரியா"

(மனம் ஆறுதலைத் தொடங்க, சிந்தை ஒத்துழைக்க
பிறந்ததே பின் வருபவை!! )

உன்னைப்போல் பலரும் உண்டு! சொல்கிறேன் கேள்!!

"வெளியே கடுங்குளிர்! – கட்டுமரவீட்டின்
உள்ளே மிதமான சூடு
பொருக்க முடியாமல் நாம் - அருந்துவோம்
குளிர்ப் பெட்டியிலிருந்து பானங்கள் !

(வெட்ட)வெளியில் மூலிகை மண்டி! ஆய்வுக்கூடத்தின்
உள்ளே செயற்கை அணுக்கூட்டம் (synthetic molecules)
பொருக்க முடியாமல் (side effectsai) நாம் தருவிப்போம்
மூலிகை”யொத்த” செயற்கை மருந்துகள் !

வெளியே வேண்டுமிந்த சுதந்திரம் ! அகத்தின்
உள்ளே ‘அவனு’க்கு அடிமை சாசனம்
பொருக்க முடியாமல் அவனை அதட்டுவோம்
‘மணந்தால் சரிபாதி உரிமை வேண்டும்’ என்று !


(அவன்) உள்ளே அத்தனையும் அழகு - அகத்தின்
வெளியே அழகு பெண்ணையே அணுகுவான்!
அவள்அகத்தில் அழகுதேடி அலுத்து சலித்து
பொருக்க முடியாமல் காலம் தள்ளுவான் ! "

நான்:
ஆஹா ஹா..கேட்டாயா பிரியா!!

“இவை அனைத்திற்கும் சிரித்து விட்டுதானே இங்கு வந்தாய் இறைவா!!”

வெட்கக்கேட்டில் ஒரு ஒப்புமை வேறு! சரி
முடிவில் என்ன தான் சொல்கிறாய் மனமே !

மனம் சொல்லியது:

வெளியே ஜுன் 28ஆம் தேதி தேர்வு – அகத்தின்
உள்ளே ஆழ்ந்த தத்துவ சிந்தனை
பொருக்க முடியாமல் நீ (கொட்டிவிட்டாய்) – போதும்
“போய் படிக்க வேண்டியதை கவனி” என்று !

என்ன சிரிப்புச் சத்தம்? அருகில் நண்பர்கள்!!

நான் படிக்கும் அழகைப் பார்த்து
ஆண்டவன் சிரித்தானோ - என எண்ணினேன்

நானும் அவர்களுடன் சிரித்தேன் !!

நீங்கள் எப்படி?


(Actually title veliye ullennu vekkalaamnnu nenachen.. aprom, vevakaarama ninaipaangalonnu bayandhuten :)-)

3 comments:

The Doodler said...

ada, neeyum namma category dhaana! office-la peak summer-layum its very cold inside. A/c is cranked up to the max. I always wear a sweater..sigh..:( Enna kodumai!

prabukarthik said...

abaaram:)
nalla prepare panreenga pola?? adhaan exam ku:P

>>vevakaarama ninaipaangalonnu

kandippa :)

Priya Venkatakrishnan said...

aamaam subha.. andha kodumaiya en kekra..
sweater pottundaa koodaa kaal kai viral ellaam jillunu iruku...
kodumaiyo kodumai..


enna panna pk.. padikumbodhu dhaan mandai suru surupaa iruku..
thevai illadha vishayangalum thonudhu!!